மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: அரசு பஸ் மோதி வாலிபர் பலி தாய் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார். அவரது தாய் படுகாயம் அடைந்தார்.
நவிமும்பை,
நவிமும்பை கண்டா காலனி பகுதியை சேர்ந்தவர் சுனிதா(வயது55). இவருடைய மகன் சதானந்தா பாட்டீல்(33). சம்பவத்தன்று காலை இருவரும் கண்டேஷ்வர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சயான்-பன்வெல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் மற்றும் மகன் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதற்கிடையே பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் இரு வரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சதானந்தா பாட்டீல் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுனிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த காமோடே போலீசார் சதானந்தா பாட்டீலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.