திருமணம் ஆகாமலேயே மகள் தாயாகியதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திருமணம் ஆகாமலேயே மகள் தாயாகியதால் அவமானத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-06-17 22:15 GMT
மைசூரு, 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மனுகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேகவுடா (வயது 45). இவருடைய 17 வயது மகள் மைசூருவில் உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு பி.யூ.சி. படித்து வருகிறார். இவர் அடிக்கடி மைசூரு அருகே உள்ள குரிகுந்தி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்ற வாலிபருடன் மைனர் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர்.

இதன்காரணமாக அந்த மைனர் பெண் கர்ப்பமானார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மைனர் பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கியதாக உல்லஹள்ளி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மஞ்சுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மைனர் பெண் தாயாகிய சம்பவம் மனுகனஹள்ளி கிராமம் முழுவதும் பரவியது. திருமணம் ஆகாமலேயே தனது மகள் தாயாகி விட்டதால் நஞ்சேகவுடா மனமுடைந்து காணப்பட்டார். மேலும் வெளியே சென்றால் அவமானம் ஆகிவிடும் என்று அவர் வீட்டுக்குள்ளேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது தோட்டத்துக்கு சென்ற நஞ்சேகவுடா, அங்கு வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்குரு ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் நஞ்சேகவுடாவின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்குரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்