மன்னார்குடியில் பயங்கர தீ விபத்து: 14 கூரை வீடுகள்- 2 கடைகள் எரிந்து நாசம் ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம்
மன்னார்குடியில் நேற்று நடந்த பயங்கர தீ விபத்தில் 14 கூரை வீடுகள், 2 கடைகள் எரிந்து நாசமானது. இதில் ரூ.50 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-மதுக்கூர் சாலையில் உள்ள கோபிரளய குளக்கரை பகுதியில் ஏராளமானோர் கூரை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி தொழிலாளர்கள். இங்கு உள்ள ஒரு வீட்டின் கூரை நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த கூரை வீடுகளுக்கும் பரவியது.
தீப்பிடித்து எரிந்ததால் வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஒரே நேரத்தில் பலருடைய கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு உள்ள குளத்தில் தேங்கி இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு படை வீரர்களின் 3 மணிநேர போராட்டத்துக்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அய்யப்பன்(வயது50), அன்பழகன்(57), சண்முகம்(47), கிருஷ்ணன்(45), ராஜம்மாள்(50), காளியப்பன்(70), சங்கர்(50), ராஜேந்திரன்(50), கவிதா(55), பாலாயி(80), செல்லம்மாள்(80), ராம்கி(47), பிரபாகர்(37), மலர்(60) ஆகிய 14 பேரின் கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் அப்பகுதியில் இருந்த பூபதி, புகழேந்தி ஆகியோருடைய இறைச்சி கடைகளும் எரிந்து நாசமாயின. இந்த பயங்கர தீ விபத்தில் வீடுகளில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாயின.
மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.