தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 24 தங்க பதக்கங்களை பெற்ற திருச்சி வீரர்-வீராங்கனைகள்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்சியை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 24 தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.;
திருச்சி,
கோவாவில் கடந்த 10, 11 மற்றும் 12-ந் தேதிகளில் தேசிய அளவிலான சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தே, குங்பூ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் சிலம்பம் போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற திருச்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் 24 பேர் தங்கப்பதக்கங்களையும், 2 பேர் வெள்ளி பதக்கங்களையும் அள்ளி வந்து உள்ளனர்.
இந்த வீரர்-வீராங்கனை களுக்கு நேற்று திருச்சியில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் விளையாட்டின் தேசிய பயிற்சியாளர்கள் வேல்முருகன், விஜயகுமார், சிலம்பம் ஒருங்கிணைப்பாளர் தர்மசாஸ்தா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வேல்முருகன், விஜயகுமார் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிலம்பம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. நமது முன்னோர்கள் இதனை போர்களிலும், தற்காப்புக்காகவும் பயன்படுத்தி வந்தனர். ஒரு அடிதடி விளையாட்டு என்கிற வகையில் இருந்த சிலம்பம் இப்போது மதிப்பெண்கள் அளிப்பதற்கு மட்டுமே விளையாடுவது என கொண்டு வரப்பட்டு உள்ளது. சீனாவில் கராத்தே பள்ளி, கல்லூரிகளில் பாட புத்தகங்களில் இடம் பெற்று உள்ளதை போன்று தமிழகத்தில் சிலம்பம் கலையை பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் சிலம்பம் போட்டியையும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும்.
தேசிய பயிற்சியாளர்களாகிய நாங்கள் மாணவ -மாணவிகளுக்கு சிலம்பம் விளையாட்டிற்கு இலவச பயிற்சி அளித்து வருகிறோம். ஆனால் அவர்களை போட்டிக்கு அழைத்து செல்ல பணம் தேவைப்படுவதால் அரசு தான் இந்த விளையாட்டை ஊக்குவிக்க நிதி உதவி செய்யவேண்டும். தேசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் வருகிற ஆகஸ்டு மாதம் துபாயில் நடைபெற உள்ள சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.