மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டேவின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
கத்ரா மலைப்பாதையில் பின்தொடர்ந்து வந்தபோது மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டேவின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார்வார்,
கர்நாடக வருவாய்த்துறை மந்திரியான ஆர்.வி.தேஷ்பாண்டே நேற்று உத்தர கன்னடா மாவட்டம் கார்வாருக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வாகனமும் வந்தது. அந்த ஜீப்பில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீஸ்காரரும், டிரைவருமான ராஜேஷ் மற்றும் 3 போலீஸ்காரர்கள் பயணித்து வந்தனர்.
அவர்கள் கார்வார் தாலுகா கத்ரா மலைப்பாதை வழியாக அனசிகட்டா பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த மலைப்பாதையில் 2-வது ஊசி கொண்டை வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி மேல்புற சாலையில் இருந்து கீழ்புற சாலையில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீஸ்காரர் ராஜேஷ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்ற 3 போலீஸ்காரர்களும் லேசான காயங்களுடன் தப்பினர். இதுபற்றி அறிந்த மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே உடனடியாக தனது காரை நிறுத்தினார். பின்னர் அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வினாயக் பட்டீலை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீஸ்காரர் ராஜேஷ் ஆகியோர் கத்ரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கத்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.