பத்லாப்பூர் குடோனில் ரூ.18 லட்சம் போதைப்பாக்குகள் பறிமுதல்

தானே மாவட்டம் பத்லாப்பூர் கிழக்கு பகுதியில் உள்ள குடோனில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2019-06-15 23:00 GMT
அம்பர்நாத்,

போலீசார் நேற்று முன்தினம் இரவு குடோனிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அந்த குடோனில் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்