தானேயில் மண்சரிவால் 3 வாகனங்கள் சேதம்

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையோரம் நேற்று முன்தினம் இரவு 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Update: 2019-06-15 23:00 GMT
தானே,

கட்டுமான பணிகள் அந்த சாலை அருகே  நடந்து வந்தது. மேலும் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சாலையோரத்தின் ஒருபகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சிக்கி சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்