மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் - பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்,
கடலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கடலூர் முதுநகரில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலை மை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஸ்டாலின் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜேந்திரன், முரளி, ரமேஷ், நாகராஜன், பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், அமைப்பு துணை செயலாளர் பி.ஆர்.பி.வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் போஸ்ராமச்சந்திரன், விஜயகாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் வாய்க்கால் பணிகள் தரமற்றதாக உள்ளது.
எனவே அந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா. ம.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்த பொது மக்களுக்கு நன்று தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் சந்திரசேகர், இளவரசன், தட்சிணாமூர்த்தி, வாட்டர் மணி, ஏசி.மணி, சிவரமேஷ், ராமமூர்த்தி, பாரதி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர தலைவர் மதி நன்றி கூறினார்.