மாணவியை திருமணம் செய்த கூலித்தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை திருமணம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 25). கூலித்தொழிலாளியான இவர், அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் 16 வயதான மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோவிந்தசாமியை எச்சரித்தனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை அழைத்து சென்ற கோவிந்தசாமி, பேளூர் ஈஸ்வரன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து மாணவி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.