கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு; சிவகாசி பகுதியில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுமா?
சிவகாசி பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் கூடுதலான ஆழ்துளை கிணறு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவகாசி,
கடந்த 2 மாதங்களாக சிவகாசி மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் 400 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்த பொதுமக்கள் தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி நகராட்சி சார்பில் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் என்ற நிலை வந்துவிட்டது. தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் தனியாரிடம் இருந்து விலை கொடுத்து தண்ணீர் வாங்குகின்றனர்.
இந்த தண்ணீர் சுகாதாரமானதா? என்பதை அதிகாரிகள் சோதனை செய்வது இல்லை என்று கூறப்படுகிறது. சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தனியார் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி பயன்படுத்த தகுதியானதா என்பதை கண்டறிந்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தரம் குறைந்த தண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் எடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற விதியை தனியார் தண்ணீர் வினியோகிப்பாளர்கள் பின்பற்றுகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள தற்போதைய சூழ்நிலையில் தண்ணீரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகஅளவில் உள்ளதால் சிவகாசி பகுதியில் சில தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளை மதிய சாப்பாட்டின் போது கையால் சாப்பிடாமல் கரண்டி மூலம் சாப்பிட வலியுறுத்தி வருகிறார்கள். இதே போல் கழிப்பிடங்களுக்கு போதிய தண்ணீர் சப்ளை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையை போக்க அதிகாரிகள் குடிநீர் வினிியோக முறையை கண்காணித்து தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.
குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதால் வீணாகி வருவதை தடுத்து பழுதான குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் போதிய தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் ஆழ்துளை கிணறு அமைத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல இடங்களில் ஆழ்துணை கிணறுகள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியதும் அவசியமாகும்.