ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2019-06-15 22:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போதிய மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தென் மேற்்கு பருவ மழையும் இல்லை. குடிநீர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர்் எடப்பாடி பழனி்சாமி ஆலோசனைப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எடுத்து வருகிறார்.

ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தண்ணீர் பஞ்சத்தினால் 16 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர்தட்டுப்பாட்டை போக்க ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றபடவுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாள் 1 க்கு வர வேண்டிய 54 லட்சம் லிட்டர் நீர் வராததற்கு காரணம் நீர் ஏற்றும் பகுதியில் காற்று அதிகமாக இருப்பதால் மின் வெட்டு ஏற்பட்டு மோட்டாரை இயக்க முடியவில்லை.

வரும் வாரத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி விரைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா, சாத்தூர் ராஜவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்