மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்
மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததையொட்டி விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி,
தமிழக கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை கடந்த ஏப்ரல் 15–ந் தேதி முதல் ஜூன் 14–ந் தேதி வரை மீன்பிடி தடைகாலமாகும். கன்னியாகுமரி சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 350–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. தடைகாலத்தையொட்டி படகுகள் அனைத்தும் கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பழுதான விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்க்கும் பணியிலும், படகுகளில் பச்சை நிற வர்ணம் பூசும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இது தவிர சேதம் அடைந்த மீன்பிடி வலைகளையும் சரிசெய்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தடைகாலம் முடிவடைந்தால் நேற்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று 200–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று கடலுக்குள் சென்றுள்ளன. இதன் காரணமாக சின்னமுட்டம் துறைமுகம் மீண்டும் ‘களை’ கட்டத் தொடங்கியுள்ளது.
மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததால் மீன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சின்னமுட்டத்துக்கு மீன்களை வாங்க மீன்வியாபாரிகள் வரத் தொடங்கி உள்ளனர்.