ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
ஒரத்தநாடு அருகேபெண்ணிடம்12 பவுன்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் கல்லணைக்கால்வாய் பாலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் நவதானிய வியாபாரி.
இவருடைய மனைவி ரேவதி (வயது42). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
வீடு புகுந்த மர்ம நபர்
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையை கொண்டு உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் ரேவதியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணியும் நடந்தது.
இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.