தனியார் நிறுவன ஊழியர் தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்தார்: தற்கொலையா?- போலீஸ் விசாரணை
பெங்களூருவில் மாயமானதாக தேடப்பட்டு வந்த தனியார் நிறுவன ஊழியர் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு சம்பிகேஹள்ளி அருகே ஹெக்டே நகரில் வசித்து வந்தவர் அப்ரோஜ்கான் (வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. முதலில் கால்சென்டர் நிறுவனத்தில் ஊழியராக அப்ரோஜ்கான் பணியாற்றினார். பின்னர் தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி வெளியே சென்ற அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் அப்ரோஜ்கானை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்தது. உடனே தொட்டியை திறந்து குடும்பத்தினர் பார்த்தார்கள். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் அப்ரோஜ்கான் பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் சம்பிகேஹள்ளி போலீசார் விரைந்து வந்து அப்ரோஜ்கானின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்ரோஜ்கான் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அப்ரோஜ்கான், அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையால் அப்ரோஜ்கானின் மனைவி, அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ரம்ஜானுக்கு தனது மனைவியை பார்க்க அப்ரோஜ்கான் சென்றுள்ளார். அப்போது குடும்பத்தினர் தன்னை மதிக்கவில்லை என்றும், சரியாக சாப்பாடு தருவதில்லை என்றும் தனது மனைவியிடம் அப்ரோஜ்கான் கூறி இருந்தார்.
இதனால் மனைவி பிரிந்து சென்றதாலும், குடும்பத்தினர் மதிக்காத காரணத்தாலும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும் அப்ரோஜ்கான் எப்படி உயிர் இழந்தார்? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி செத்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசார், மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.