நாகர்கோவில் அருகே பூசாரி வீட்டில் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
நாகர்கோவில் அருகே பூசாரி வீட்டில் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அழகியமண்டபம்,
நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு சிவபுரம் பகுதியில் வசிப்பவர் வெங்கட்ராமன். இவர் களியங்காடு சிவன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 6-ந்தேதி வெங்கட்ராமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.
நேற்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் 20 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
இதுபற்றி வெங்கட்ராமன் இரணியல் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். நகை-பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.