பெற்றோருடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-06-10 23:15 GMT
சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 56). இவருடைய மகள் கவிதா (25). பி.காம். பட்டதாரியான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் கவிதா வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவிதாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது.

பின்னர் கவிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த சைதாப்பேட்டை போலீசார், தற்கொலை செய்த கவிதா உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்