ஒரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கீடு; அதிகாரி தகவல்
ஒரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
படப்பை,
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆதனூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு பேரிடர் மேலாண்மை பணிகளுக்காக ரூ.84.70 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதில் ஏரிகளை ஆழப்படுத்துதல், வெள்ள உபரிநீர் செல்ல கால்வாய், பூமிக்கடியில் செல்லும் வகையில் பாதாள கால்வாய், ஏரிகளில் கலங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி இதுவரை 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் கே.சத்தியகோபால், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் சத்தியகோபால் கூறியதாவது:-
ஓரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் இந்தப்பகுதிகளில் பெரிய நீர்த்தேக்கம் உருவாகி 0.75 டி.எம்.சி. நீர் தேக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.