குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் வேதாரண்யம் அருகே நடந்தது
குடிநீர் வழங்கக்கோரி வேதாரண்யம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி மரப்பாலம் அருகே வசிக்கும் ஏராளமான குடும்பங்களுக்கு ஒரு மாத காலமாக குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தட்டுப்பாடி இன்றி தங்கள் பகுதிக்கு குடிநீர்் வழங்க வேண்டும் என கோரி அகஸ்தியன்பள்ளி மரப்பாலம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் வேதாரண்யம்- கோடியக்கரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.