ரெயில்வே நிறுவனத்தில் சூப்பிரவைசர் வேலை
ரெயில்வே சுற்றுலா கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் தெற்குமண்டலத்தில் சூப்பிரவைசர் ஹாஸ்பிடாலிட்டி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன், புட் அண்ட் பீவரேஜ் நிறு வனத்தில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், இந்த பணிக்கான நேர்காணலில் பங்கேற்கலாம்.
விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, நேர்காணலில் பங்கேற்க வேண்டும். திருவனந்தபுரத்தில் 11-ந் தேதியும், பெங்களூருவில் 13-ந் தேதியும், சென்னையில் 15-ந் தேதியும் நேர்காணல் நடக்கிறது. தேவையான சான்றுகளை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இது பற்றிய விவரங்களை www.irctc.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.