மாணவருக்கு அரிவாள் வெட்டு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாயார் மனு
மாணவருக்கு அரிவாள் வெட்டு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாயார் மனு உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தார்.;
குளச்சல்,
புதுக்கடை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரியவிளை கீழ்குளத்தை சேர்ந்த சுமேஷ்குமார் மனைவி லைலா. இவர் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் ‘எனது மகன் அபின் பிளஸ் -2 படித்து வருகிறான். அவனை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டு உள்ளார். லைலாவுடன் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் சுசீலா ஆகியோர் சென்று இருந்தனர்.