விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அரியலூர்- பெரம்பலூர் மாவட்டம் உள்ளடக்கிய செயற்குழு கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் பாவரசு, குணவழகன், பாரிவேந்தன், கோவேந்தன், கனியமுதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்துவது. அதன்படி வருகிற 13-ந் தேதி ஜெயங்கொண்டத்திலும், 14-ந் தேதி அரியலூரிலும் 15-ந் தேதி குன்னத்திலும் செயற்குழு நடத்துவது. இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் தலித்மக்கள் பாதிக்காத வண்ணம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பொன்பரப்பி கலவரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பிற சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் எந்த வித பதிவையும் பதிவேற்றம் செய்யக்கூடாது. மீறி பதிவேற்றம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.