தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பாளர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் எதிரணி உருவாகியது சினேகன் பேட்டி
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தான் எதிரரணி உருவாகி உள்ளது என்று புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல பொறுப்பாளர் சினேகன் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், கணிசமான வாக்குகளை பெற்று உள்ளது. சிவகங்கை தொகுதியில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எதிர்பாராத விதமாக தான் வெற்றி பெற்றார். கிராமங்கள் தோறும் மக்கள் நீதி மய்யம் கட்சியை கொண்டு செல்வதுதான் எங்களின் அடுத்த இலக்கு. அதை நோக்கிதான் எங்களின் பயணம் தற்போது உள்ளது.
2021-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்குள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் எனக்கூறி உள்ளார். அவர் வந்தால் பார்ப்போம். தமிழக அரசியலை விட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெறும் அரசியல் பெரும் அரசியலாக உள்ளது. பொறுப்பில் உள்ளவர்கள் தாங்கள் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது. இதில் அரசியல் செய்யக்கூடாது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தான் எதிர் அணியினர் உருவாகி உள்ளனர்.
அவர்கள் மீண்டும் வரவேண்டும் என்றால் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என உறுப்பினர்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். நாங்கள் ஒருபோதும் அரசியலை கலைத்துறையோடும், கலைத்துறையை அரசியலோடும் கலக்க மாட்டோம். அப்படி நாங்கள் நினைத்திருந்தால் நடிகர்களை நாங்கள் அதிக அளவு கட்சியில் இணைத்து இருப்போம்.
முகம் தெரியாத ஆயிரக்கணக்கான கலைஞர்களும், நடிகர்கள் தான். அவர்களுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் நல்லது செய்ய வேண்டும். சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு தற்போதைய நிலையே நீடிக்கும் என்று அவர் கனவு காண வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.