செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் திருச்சியில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் திருச்சியில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
திருச்சி,
திருச்சி தென்னூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அருணன். இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நிர்மலாதேவி. இவர் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் ராகவ்சந்திரசேகர் (வயது 13). இவன் தென்னூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக ராகவ்சந்திரசேகர் சரியாக படிக்காமல் டி.வி. பார்ப்பதும், செல்போனில் கேம் விளையாடுவதுமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் ராகவ்சந்திரசேகர் வீட்டில் ஊஞ்சல் மாட்டும் கொக்கியில் துண்டை கட்டி தூக்குப்போட்டு கொண்டான்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று அதிகாலை அவன் தூக்கில் தொங்கியதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்தபோது, அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்னூர் அண்ணாநகர் பகுதியில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.