எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதிதாக திறந்த கவுண்ட்டர்களை பயன்படுத்தாத பயணிகள்
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதிதாக திறந்த கவுண்ட்டர்களை பயணிகள் பயன்படுத்தாமல், மூர்மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் எடுக்கிறார்கள்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்கும் மற்றும் புறநகர் ரெயிலில் பயணம் செய்வதற்கும் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் எடுப்பதற்கான கவுண்ட்டர்கள் மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ளன.
இந்த டிக்கெட் கவுண்ட்டர்களில் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். வடசென்னையில் இருந்து வால்டாக்ஸ் சாலை வழியாக வரும் பயணிகள், வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட் எடுக்க வேண்டுமானால் ரெயில் நிலையத்தின் மறுமுனையில் உள்ள மூர்மார்க்கெட் வளாகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் குறிப்பாக ரெயில் புறப்படும் முன்பாக கடைசி நிமிடங்களில் வந்து டிக்கெட் எடுக்கும் பயணிகள், மூர்மார்க்கெட் சென்று டிக்கெட் எடுத்து வந்து ரெயில் ஏறுவதற்குள் படாதபாடுபடுகின்றனர்.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் 6 முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் வால்டாக்ஸ் சாலையில் இருந்து எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கான நுழைவுவாயில் அருகே திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட இந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலம் பயணிகள் சிரமம் இல்லாமல் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதற்கு எளிதாக இருக்கும். முதலில் இந்த கவுண்ட்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு கொண்டிருந்தது. தற்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இந்த நிலையில் சென்டிரலில் புதிதாக திறக்கப்பட்ட 6 டிக்கெட் கவுண்ட்டர்களும், திறக்கப்பட்ட நாளில் இருந்து வெறிச்சோடி கிடக்கிறது. பயணிகள் யாரும் இங்கு வந்து டிக்கெட் எடுப்பதில்லை. வால்டாக்ஸ் சாலை வழியாக வரும் பயணிகள் கூட மூர்மார்க்கெட் சென்று தான் டிக்கெட் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மூர்மார்க்கெட்டில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக காத்திருந்து டிக்கெட் எடுத்து சென்று வந்தனர். இதை கருத்தில் கொண்டுதான் அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் டிக்கெட் எடுத்து செல்ல இந்த 6 புதிய டிக்கெட் கவுண்ட்டர்களை ரெயில்வே நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது. ஆனால் பயணிகள் யாரும் இதை பயன்படுத்த முன்வரவில்லை. பயணிகள் புதிதாக திறக்கப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர்களையும் பயன் படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.