மும்பையில் மலேரியா பரவுகிறதா? கொசு அழிப்பு பணியில் மாநகராட்சி தீவிரம்

மும்பையில் மலேரியா பரவுவதாக புகார்கள் வந்த நிலையில் கொசு அழிப்பு பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி உள்ளது.

Update: 2019-06-08 22:13 GMT
மும்பை,

மழைக்காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தென் மும்பை பகுதியில் சிலர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளன. நரிமன்பாயின்ட் பகுதியில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் மலேரியாவை பரப்பும் கொசுக்களால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் மலேரியா கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந் தன.

அழிக்கும் பணி

இதையடுத்து மலேரியா கொசுக்களை அழிக்கும் நடவடிக்கையில் மும்பை மாநகராட்சி இறங்கி உள்ளது. அதிகாரிகள் தென்மும்பை பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வரும் இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளால் கொசு உற்பத்தி பெருகி வருகிறது என்ற குற்றச்சாட்டை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்