உலக அளவில் பலா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
உலக அளவில் பலா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் தெரிவித்தார்.
திருச்சி,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும், திருச்சி மகளிர் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து திருச்சி நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள கல்லூரி ஆடிட்டோரியத்தில் நேற்று பலா தின கண்காட்சியை நடத்தினர். இதையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு வந்த பல்வேறு ரக பலாப்பழங்கள் கல்லூரி வளாகத்தில் அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த பலாப்பழ கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நீ.குமார் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பலாப்பழங்கள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பலாக்கன்றுகள், பலாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒவ்வொரு அரங்கமாக சென்று அவர் பார்வையிட்டார். மேலும் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மகளிர் தோட்டக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தே.சரளாதேவி வரவேற்று பேசினார். பலா சாகுபடி மற்றும் மதிப்பூட்டுதல் என்ற தலைப்பிலான நூலை தமிழ்நாடு பல்கலைக்கழக துணை வேந்தர் நீ.குமார் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
முக்கனிகளில் ஒன்று பலா. உலக அளவில் பலா சாகுபடி உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை திரிபுரா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 2016-17ம் ஆண்டில் 18 லட்சத்து 26 ஆயிரம் டன் பலா உற்பத்தி செய்யப்பட்டன. இந்தியாவில் 2015-16ம் ஆண்டில் பலா மரங்கள் 1 லட்சத்து 51 ஆயிரம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டது. மதிப்பூட்டப்பட்ட பொருட் கள் மூலம் வருடம் முழுவதும் பலாவானது நுகர்வோருக்கு கிடைக்கிறது. பலாவில் இருந்து பலவிதமான மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நாம் வருமானம் பெறலாம். பிஞ்சுக்காய்கள் முதல் பழுத்த பழங்கள்வரை அவற்றில் தாது உப்புகளும், வைட்டமின்களும், விதைகளில் மாவுச்சத்தும் நிறைந்துள்ளன. தற்போது ஐஸ் கிரீம்கூட பலா கொட்டை பவுடரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதால், பலாப்பழ கழிவில் இருந்தே தட்டு செய்யப்படுகிறது. காப்பி கொட்டையை வறுத்து காபிபொடி தயாரிப்பதுபோல, பலாப்பழ கொட்டையை வறுத்து பவுடர் தயாரிக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிக்காத வகையில் அனைத்தும் செய்யப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் இனிப்பு குறைவான, நார் சத்து உள்ள பலா பழவகைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். மலேசியாவில் பலா நடவு செய்த 2 அல்லது 3-வது வருடத்தில் காய்க்கும் ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை தனியார் நர்சரி விற்பனையாளர்கள் கேரளாவில் அறிமுகம் செய்துள்ளனர். அதுபோன்ற ரகம் மக்களுக்கு தெரியவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுக்கு முன்பு பலாப்பழத்தை வீட்டுக்குள் வைத்து வெட்டி சுளையை தின்ற காலம் இருந்தது. பின்னர் பஸ் நிலையப்பகுதியில் விற்க தொடங்கினர். அது சுகாதார முறையாக இருக்காது என்பதால் தற்போது டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் பாக்கெட் போட்டு விற்கும் அளவுக்கு வந்து விட்டது. அங்கீகரிக்கப்பட்டது 8 ரகங்கள்தான். ஆனால், 500 ரகங்கள் வரை உள்ளது.
பலா உற்பத்தியில் அதிக மகசூல் எடுத்தவர்களுக்குப் பரிசுகளும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ரகத்தை தொழில் நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்வார்கள். விவசாயிகள், பலா சாகுபடியை தோப்பாக போட முடியாவிட்டால், இருக்கிற நிலத்தைச் சுற்றி பலாக்கன்று நட்டு சாகுபடி செய்யலாம். காபித் தோட்ட எஸ்டேட்டுகளில் காபி செடி நிழலுக்கு பலாமரம் வளர்க்கப்படுகின்றன.
அமிலத்தன்மை உள்ள மண்ணில் நல்ல வளரும் தன்மை கொண்டது. களிமண் பகுதியில் வளரும் தன்மை குறைவு.இவ்வாறு அவர் பேசினார். . நிகழ்ச்சியில் திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பழவியல் துறை தலைவர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.