பேரளத்தில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

பேரளத்தில் இருந்து ஓசூருக்கு 950 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.;

Update: 2019-06-08 22:15 GMT
நன்னிலம்,

பேரளத்தில் இருந்து ஓசூருக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வெளிமாவட்டங்களுக்கும் சரக்கு ரெயிலில் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

950 டன் நெல்

அதன்படி பேரளத்தில் இருந்து ஓசூருக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி குடவாசல், ஆலங்குடி, கடகம்பாடி ஆகிய பகுதிகளில் திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் ஓசூருக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்