அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, ராஜபாளையம், சாத்தூர் யூனியன் வார்டுகளில் அமையும் ஊராட்சிகள் விவரம்

உள்ளாட்சி தேர்தலில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, ராஜபாளையம், சாத்தூர் யூனியன் வார்டுகளில் அமையும் ஊராட்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2019-06-07 23:34 GMT

விருதுநகர்,

உள்ளாட்சி தேர்தலையொட்டி வார்டு ஒதுக்கீடு விவரம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் யூனியன்களில் உள்ள வார்டுகளில் இடம் பெறும் ஊராட்சிகள் குறித்த விவரம் வருமாறு:–

அருப்புக்கோட்டை யூனியனில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 1–வது வார்டில் சூலக்கரை, வில்லிபத்ரி, 2–வது வார்டில் குல்லூர்சந்தை, பெரியவள்ளிக்குளம், 3–வது வார்டில் பாலவநத்தம், 4–வது வார்டில் கோபாலபுரம், ராமானுஜபுரம், கோவிலாங்குளம், கட்டங்குடி, 5–வது வார்டில் பாலையம்பட்டி ஊராட்சியில் 1 முதல் 6–வது வார்டுகள் மட்டும், 6–வது வார்டில் பாலையம்பட்டி ஊராட்சியில் 7 முதல் 10 மற்றும் 13–வது வார்டு, 7–வது வார்டில் பாலையம்பட்டி ஊராட்சியில் 11, 12, 14, 15 வார்டுகள், 8–வது வார்டில் செம்பட்டி ஊராட்சியில் 3, 4, 7 முதல் 12–வது வார்டு வரை மற்றும் புலியூரான் ஊராட்சி, யூனியன் 9–வது வார்டில் ஆத்திப்பட்டி ஊராட்சியில் 2–வது வார்டு முதல் 9 வரை, 10–வது வார்டில் ஆத்திப்பட்டி ஊராட்சி 1–வது வார்டு, கஞ்சநாயக்கன்பட்டி, 11–வது வார்டில் சுக்கிலநத்தம், டி.மீனாட்சிபுரம்,வெள்ளையாபுரம், மலைபட்டி ஊராட்சி, 12– வது வார்டு, யூனியன்12–வது வார்டில் ஆமணக்குநத்தம், போடம்பட்டி, திருவிருந்தாள்புரம், வதுவார்பட்டி, குருந்தமடம், 13–வது வார்டில் செட்டிக்குறிச்சி, சேதுராஜபுரம், செட்டிபட்டி, சிதம்பராபுரம், 14–வது வார்டில் தும்மகுண்டு, பந்தல்குடி ஊராட்சியில் 1, 2, 3, 7, 8, 9, 10, 11 வார்டுகள், யூனியன் 15–வது வார்டில் பந்தல்குடி ஊராட்சியிலுள்ள 4, 5, 6, 12–வது வார்டுகள் மற்றும் கொப்புச்சித்தம்பட்டி, வேலாயுதபுரம் ஊராட்சிகள் ஆகியவை அடங்கியுள்ளன.

காரியாபட்டி யூனியனில் உள்ள 12–வார்டுகளில், 1–வது வார்டில் டி.கடம்பங்குளம் ஊராட்சி 1,4,5,6 வார்டுகள் மற்றும் ஆவியூர், 2–வதுவார்டில் மாங்குளம், குரண்டி, அரசகுளம், முஸ்டக்குறிச்சி, 3–வது வார்டில் மேலகள்ளங்குளம், டி.வேப்பங்குளம், பாபணம், வி.நாங்கூர், சத்திரபுளியங்குளம், 4–வது வார்டில் கம்பிக்குடி, டி.கடம்பங்குளத்தில் 2, 3, 7, 8, 9 வார்டுகள், 5–வது வார்டில் எஸ்.கல்லுப்பட்டி, பாம்பட்டி, பிசிண்டி, தண்டியனேந்தல், 6–வது வார்டில் மாந்தோப்பு, அழகியநல்லூர், 7–வது வார்டில் நதிகுண்டு, வரலொட்டி, வழுகலொட்டி, 8–வது வார்டில் வக்கனாங்குண்டு, தோணுகால், 9–வது வார்டில் கல்குறிச்சி, ஜோகில்பட்டி, பாண்டனேந்தல், 10–வது வார்டில் தோப்பூர், கிழவனேரி, ஆலாலபேரி, 11–வது வார்டில் டி.செட்டிகுளம், சோரனூர், பி.புதுப்பட்டி, பனிகுறிப்பு, 12–வது வார்டில் முடுக்கன்குளம், எஸ்.மறைக்குளம், துலுக்கன்குளம் ஊராட்சிகள் உள்ளன.

நரிக்குடி யூனியனில் மொத்தமுள்ள 14–வார்டுகளில் 1–வது வார்டில் பிள்ளையார்குளம், பூம்பிடாகை, கல்விமடைபூலாங்குளம், திருவளர்நல்லூர், 2–வது வார்டில் ஆலத்தூர், எழுவணி, வி.கரிசல்குளம், திம்மாபுரம், புல்வாய்க்கரை, 3–வது வார்டில் ஏ.முக்குளம், அழகாபுரி, 4–வது வார்டில் உளுத்திமடை, நாலூர், 5–வது வார்டில் கட்டனூர், இருஞ்சிறை, கொட்டகாச்சியேந்தல், டி.கடம்பங்குளம், கீழ கொண்டாரைகுளம், 6–வது வார்டில் உலக்குடி, சாலைஇலுப்பைகுளம், பனைக்குடி, 7–வது வார்டில் இசலி, கண்டுகொண்டான்மாணிக்கம், என்.முக்குளம், நரிக்குடி, 8–வது வார்டில் மானூர், மறையூர், டி.வேலாங்குடி, வேளனேரி, 9–வது வார்டில் அந்தியேந்தல், மேலபருத்தியூர், வரிச்சியூர், வீரசோழன் 4, 9 ஊராட்சி வார்டுகள், 10–வது வார்டில் வீரசோழன் 1, 2, 3, 5 முதல் 8 வார்டுகள், 11–வது வார்டில் மீனாகுளம், நல்லுகுறிச்சி, அகத்திக்குளம், 12–வது வார்டில் நத்தகுளம், ஆனைக்குளம், பூமாலைபட்டி, 13–வது வார்டில் சேதுபுரம், பிள்ளையார்நத்தம், ரெகுநாதமடை, 14–வது வார்டில் இலுப்பையூர், வேலானூரணி ஆகிய ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

ராஜபாளையம் யூனியனில் மொத்தமுள்ள 22–வார்டுகளில் 1–வது வார்டில் சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்பும், 2–வது வார்டில் சுந்தரநாச்சியார்பும், சோலைசேரி, கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 1 முதல் 3 வார்டுகள், 3–வது யூனியன் வார்டில் மேலபாட்டம்கரிசல்குளம், 4–வது வார்டில் தெற்கு வெங்காநல்லூர், சமுசிகாபுரம் ஊராட்சியில் 4 மற்றும் 5–வது வார்டுகள், யூனியன் 5– வது வார்டில் சமுசிகாபுரம் 1, 2,3, 6, 7, இ, 12–வது வார்டுகள், 6–வது வார்டில் சத்ரபட்டி, சமுசிகாபுரம் ஊராட்சியில் 4, 5–வது வார்டுகள், யூனியன் 7–வது வார்டில் மேலராஜகுலராமன் ஊராட்சியில் 2 முதல் 8–வது வார்டு வரை, யூனியன் 8–வது வார்டில் மேல ராஜகுலராமன் ஊராட்சியில் 1 மற்றும் 9 முதல் 12–வது வார்டு வரை, யூனியன் 9–வது வார்டில் எஸ்.ரமலிங்காபுரம், சமுசிகாபுரம் ஊராட்சியில் 14,15–வது வார்டுகள்.

10–வது வார்டில் சமுசிகாபுரம் ஊராட்சியில் 9, 10, 11, 13–வது வார்டுகள், தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் 6 முதல் 8 வரையிலான வார்டுகள்.

ராஜபாளையம் யூனியன் 11–வது வார்டில் நக்கனேரி, தெற்கு வெங்காநல்லூரில் 1, 12, 13, 14, 15– வது வார்டுகள், யூனியன் 12–வது வார்டில் அயன்கொல்லங்கொண்டான், எலதிரைகொண்டான், ஜமீன்கொல்லங்கொண்டான், 13–வது வார்டில் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 முதல் 12–வது வார்டு வரையில், 14–வது வார்டில் தளவாய்புரம், 15–வது வார்டில் முத்துசாமியாபுரம், 16–வது வார்டில் முகவூர், மேலூர் துரைசாமிபுரம், 17–வது வார்டில் வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம், 18–வது வார்டில் சொக்கநாதன்புத்தூர், 19–வது வார்டில் அருல்புத்தூர், ஜமீன் நல்லமங்களம், 20–வது வார்டில் புதூர், மீனாட்சிபுரம், 21–வது வார்டில் சோழபுரம், 22–வது வார்டில் கிழவிகுளம், குறிச்சியார்பட்டி மற்றும் நல்லமநாய்க்கன்பட்டி.

சாத்தூர் யூனியனில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் 1–வது வார்டில் சின்னகாமன்பட்டி, மேட்டமலை ஊராட்சியில் 1 முதல் 6–வது வார்டு வரை, 2–வது வார்டில் மேட்டமலை ஊராட்சியில் 7, 8, 9–வது வார்டுகள், வெங்கடாஜலபுரம் ஊராட்சியில் 1 முதல் 6 வார்டுகள் வரை, யூனியன் 3–வது வார்டில் வெங்கடாஜலபுரம் ஊராட்சியில் 7, 8, 9, 11, 12 வார்டுகள், சிந்தபள்ளி, 4–வது வார்டில் வெங்கடாஜலபுரம் 10 வது வார்டு, அம்மாப்பட்டி, ஏ.ரமலிங்காபுரம், கத்தாளம்பட்டி, 5–வது வார்டில் குண்டலகுத்தூர், நத்தத்துப்பட்டி, பாப்பகுடி, 6–வது வார்டில் கோசுகுண்டு, எம்.நாகலாபுரம், நென்மேனி, 7–வது வார்டில் சிறுகுளம், இருக்கன்குடி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, 8–வது வார்டில் சின்னகொள்ளுப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, பொத்திரெட்டிபட்டி, 9–வது வார்டில் சத்திரப்பட்டி, 10–வது வார்டில் படந்தால் ஊராட்சியில் 3 முதல் 9–வது வார்டு வரை.

சாத்தூர் யூனியன் 11–வது வார்டில் ரெங்கப்பநாயக்கன்பட்டி, பாண்டவர் பட்டி, படந்தால் ஊராட்சியில் 1, 2–வது வார்டுகள் மற்றும் சங்கரநத்தம், 12–வது வார்டில் சூரங்குடி ஊராட்சியில் 1 முதல் 6 மற்றும் 9–வது வார்டு, ஒத்தையால் ஊராட்சி, 13–வது வார்டில் ஓ.மேட்டுப்பட்டி, சடயம்பட்டி, 14–வது வார்டில் சின்ன ஓடைப்பட்டி, கரிசல்பட்டி, என்.சுப்பலாபுரம், பெரியஓடைப்பட்டி, பெத்துரெட்டிபட்டி, சூரங்குடி, 15–வது வார்டில் சிந்துவம்பட்டி, முள்ளிசெவல், முத்துசாமிபுரம், நல்லமுத்தன்பட்டி, உப்பத்தூர், 16–வது வார்டில் கஞ்சம்பட்டி, குமாரபுரம், நல்லி, பெரியாம்பட்டி, தொட்டிலொவன்பட்டி, புல்வாய்பட்டி, வெங்கடேஷ்வரபுரம்.

மேலும் செய்திகள்