ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு மருத்துவமனை முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை புதுவையில் அமல்படுத்தக்கோரி மருத்துவமனை முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2019-06-07 21:40 GMT
புதுச்சேரி,

மத்திய அரசு ஏழை மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் என்ற இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற்று தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும். புதுவை மாநிலத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 1லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

ஆனால் புதுவை அரசு இந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. எனவே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை புதுவையில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் நேற்று காலை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சுகாதாரத்துறை இயக்குனருடன் சந்திப்பு

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு இயக்குனர் ராமனை சந்தித்து மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்