சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-07 23:00 GMT
சேலம், 

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வாரந்தோறும் ெவள்ளிக்கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்்கம் ஆகும். இதையொட்டி நேற்று சேலம் கோரி மேட்டில் உள்ள மாவட்ட வேைலவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதற்கு சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிறுவனத்தை சேர்ந்்த உரிமையாளர்கள் மற்றும் அந்தந்த நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

இது குறித்து வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஞானசேகரன் கூறியதாவது:-

இன்று (நேற்று) நடந்த வேலை வாய்ப்பு முகாமில் சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 32 தனியார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பட்டதாரிகள், இளைஞர்கள் என சுமார் 650-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனங்கள் அனைத்திற்கும் சேர்த்து பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 584 பணியாளர்கள் தேவைப்பட்டனர். இதில் கலந்து கொண்ட பலர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேைல இன்றி தவித்து வருகின்றனர். அதேபோன்று சேலம் மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு இன்றி ஏராளமான பட்டதாரிகள் உள்ளனர்.

வேலை இன்றி தவித்து வரும் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் நேற்று நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து ெகாண்டதால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்