நெல்லையில் என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்லைனில் சான்றிதழ்கள் பதிவேற்றம்

நெல்லையில் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று நடந்தது.

Update: 2019-06-07 22:45 GMT
நெல்லை, 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்காக மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். மாணவர்களுக்கு விண்ணப்பிக்க வசதியாக நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இங்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.

இதற்காக 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு வந்தனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவை ஸ்கேன் செய்யப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த பணி முடிந்த பிறகு கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதில் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும் செய்திகள்