ஹைவேவிஸ் மலைப்பாதையில் தடுப்புசுவரில் மோதி விபத்தில் சிக்கிய வேன்
சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை வனப் பகுதிக்கு வேனில் சுற்றுலா அழைத்து சென்றார். அங்குள்ள சுற்றுலா இடங் களை பார்த்து விட்டு நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.;
சின்னமனூர்,
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 23). வேன் டிரைவர். நேற்று முன்தினம் இவர், தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த 22 பேரை சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை வனப் பகுதிக்கு வேனில் சுற்றுலா அழைத்து சென்றார். அங்குள்ள சுற்றுலா இடங் களை பார்த்து விட்டு நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஹைவேவிஸ் மலைப்பாதையில், தென்பழனி அருகே உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் பிரேக் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், மலைப்பாதையோரத்தில் இருந்த தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த வேன், தடுப்புசுவரை தாண்டி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. அதிர்ஷ்டவசமாக பள்ளத்துக்குள் கவிழவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த காஜா மனைவி பாத்திமா (22) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மீதமுள்ள அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.