உடன்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 12 பவுன் நகை மீட்பு

உடன்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2019-06-06 22:15 GMT
குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் மற்றும் போலீசார் நேற்று காலையில் வில்லிகுடியிருப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தண்டபத்து அரசர்பேட்டையை சேர்ந்த சுரேஷ் மகன் சிவா (வயது 22) என்பதும், உடன்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதாவது, உடன்குடி பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் அந்த வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடியது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்