குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை 12-ந் தேதி திறக்க வாய்ப்பு இல்லை அமைச்சர் காமராஜ் பேட்டி
பருவமழை பொய்த்து விட்டதாலும், காவிரி நீர் பிரச்சினை காரணமாகவும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை வருகிற 12-ந் தேதி திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திருவாரூரில், அமைச்சர் காமராஜ் கூறினார்.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது மாவட்ட அளவில் மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை 1,230 மில்லி மீட்டர் பெய்து இருக்க வேண்டும். ஆனால் 924 மில்லி மீட்டர் தான் பெய்துள்ளது. இதனால் குடிநீர் தேவையில் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த குடிநீர் பிரச்சினை சம்பந்தமான கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் எந்தவித குடிநீர் பிரச்சினையும் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. முத்துப்பேட்டை, திருத் துறைப்பூண்டி போன்ற பகுதிகளில் மேடான இடங்களில் தண்ணீர் செல்வதில் சற்று தேக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சார பிரச்சினை காரணமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உரிய நேரத்தில் தண்ணீர் ஏற்ற முடியாமல் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியாத பகுதிகளில் வாகனங்கள் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை எதுவும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை பொறுத்து அவரவர் வசதிக்கு ஏற்ப விலை கொடுத்து பாட்டில்களை வாங்குகின்றனர். பொதுவாக பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கிட தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு குடிநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800 425 6772 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும். இதுவரை 69 புகார்கள் பெறப்பட்டு, அதில் 46 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் தேவைகள், உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக இருக்கும்.
குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பொய்த்து விட்டதாலும், காவிரி நீரை கர்நாடகா வழங்க மறுப்பதாலும் தொடர்ந்து உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. தற்போதும் அதே நிலை நிலவுவதால் மேட்டூர் அணை 12-ந் தேதி திறக்க வாய்ப்பில்லை.
அதனால் ஆழ்குழாய் கிணறு வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். நமக்கு உரிய தண்ணீரை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினை குறித்து விவசாயிகளும் பார்த்து கொண்டிருக்கின்றனர். தண்ணீர் வரத்தை பொறுத்து குறுவை சாகுபடியா? சம்பா சாகுபடியா? என்பது குறித்து விவசாயிகள் முடிவு செய்வார்கள். அரசின் சார்பில் உரிய நேரத்தி்ல் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த விட மாட்டோம் என்பதில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். தேவையான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசை பொறுத்தவரை மும்மொழி கொள்கை களில் உடன்பாடு இல்லை. இருமொழி கொள்கைதான் எங்கள் நிலைபாடு. எந்த காலத்திலும் அதில் மாற்றம் என்பது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.