13 தாலுகாக்களிலும், நாளை பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களிலும் நாளை பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி விழுப்புரம் தாலுகாவிற்குட்பட்ட அகரம்சித்தாமூர் கிராமத்திலும், விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்ட புதுக்குப்பத்திலும், வானூர் தாலுகா இளையாண்டிப்பட்டிலும், திண்டிவனம் தாலுகா தென்ஆலப்பாக்கத்திலும், மரக்காணம் தாலுகா வன்னிப்பேரிலும், செஞ்சி தாலுகா பாலப்பாடியிலும், மேல்மலையனூர் தாலுகா மரக்கோணத்திலும், திருக்கோவிலூர் தாலுகா நெடுக்கம்பட்டிலும், கண்டாச்சிபுரம் தாலுகா அந்திலியிலும், உளுந்தூர்பேட்டை தாலுகா கிளாப்பாளையத்திலும், கள்ளக்குறிச்சி தாலுகா பெருமங்கலத்திலும், சங்கராபுரம் தாலுகா அரசராம்பட்டிலும், சின்னசேலம் தாலுகா வெட்டிபெருமாள்அகரத்திலும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் புதிய மின்னணு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், இணையதளம் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம், வயது திருத்தம் மற்றும் பொது வினியோக திட்டம் தொடர்பான இதர மனுக்களை இந்த கூட்டங்களில் கொடுத்து பயனடையலாம்.
இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.