நகைப்பட்டறை ஊழியரிடம் 106 பவுன் அபேஸ்: தம்பதி உள்பட 4 பேர் கைது 86 பவுன் நகை, கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கோவையில் நகைப்பட்டறை ஊழியரிடம் 106 பவுன் நகையை அபேஸ் செய்த வழக்கில் தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 86 பவுன் நகை, ஒரு கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 52). இவர் ராஜவீதியில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த பட்டறையில் தங்கக்கட்டிகளை உருக்கி நகைகளாக செய்வது வழக்கம்.
அதன்படி இங்கு செய்த 106 பவுன் நகையை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள நகை கடையில் கொடுத்துவிட்டு வர அந்த நகைப்பட்டறை உரிமையாளர் சுரேஷ், ஊழியர் ராமமூர்த்தியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ராமமூர்த்தி அந்த நகையை ஒரு பைக்குள் போட்டு, மொபட்டின் முன்பகுதியில் வைத்துக்கொண்டு பஸ் ஏறுவதற்காக நேற்று முன்தினம் காந்திபுரம் பஸ்நிலையத்தை நோக்கி சென்றார்.
காலை 10.30 மணியளவில் அவர் ராம்நகரில் உள்ள ராமர்கோவில் அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவர் சென்ற மொபட் மீது மோதினார். இதில் அவர் கீழே விழுந்தார்.
அப்போது அங்கு இருந்தவர்கள் அவரை தூக்கியதுடன் அருகில் உள்ள ஒரு கடைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது ராமமூர்த்தியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் கீழே இறங்கி அவருக்கு உதவி செய்வதுபோன்று நடித்தார். ராம மூர்த்தி வைத்திருந்த ஹெல்மெட் மற்றும் நகை இருந்த பையை கொடுங்கள், மொபட்டில் வைக்கிறேன் என்று கூறி அதை வாங்கிச்சென்றார். ஆனால் ஹெல்மெட்டை மட்டும் வைத்துவிட்டு, நகை இருந்த பையுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் சம்பவம் நடந்த பகுதியில் ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.அத்துடன் ராமமூர்த்தியின் மொபட்டில் மோதிய நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தேனியை சேர்ந்த ராஜா (23) என்பது தெரியவந்தது. அந்த நபர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ராஜாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் 5 பேருடன் சேர்ந்து ராமமூர்த்தி சென்ற மொபட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி, அவரிடம் இருந்து நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ராமமூர்த்தி வேலை செய்து வரும் நகைப்பட்டறையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த பத்ரிநாதன் (28) என்பவர்தான் நகையை அபேஸ் செய்ய திட்டம் வகுத்து கொடுத்ததும் தெரிந்தது.
அதற்கு துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்த டேனியல் (30), அவருடைய மனைவி சங்கீதா (25), தம்பி பிருத்விராஜ் (24), உறவினர் குமார் (23) ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டதாக ராஜா தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் டேனியல், சங்கீதா, பத்ரிநாதன் ஆகியோரை மடக்கி பிடித்தனர். பின்னர் ராஜா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 86 பவுன் நகை, ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பிருத்விராஜ், குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.