ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூர் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி மற்றும் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் ரம்ஜான் கூட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சிறப்பு தொழுகையில் ஷபிக் ஷமில் குழும தலைவர் என்.முகம்மத் சயீத், பரிதா குழும தலைவர் மெக்கா ரபீக் அஹமத், என்.எம்.இசட். குழும தலைவர் என்.முஹம்மத் ஜக்கரியா, மொகிப் சூ உரிமையாளர்கள் மொகிப்புல்லா, அகில்அகமத், டி.ஏ.டபிள்யூ கம்பெனி டி.ரபீக்அகமத், டாப் ரப்பர் ஷமீம் அகமத், ஆம்பூர் காஜி கதீப் ஷஹாபுத்தின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்துல்பாஷித், அஸ்லம்பாஷா, தோல் தொழிற்சாலையின் மேலாளர்கள் பிர்தோஸ் கே.அகமது, தமீம் அகமது, முன்னாள் நகரசபை துணைத்தலைவர் கே.நஜர்முஹம்மத், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் கே.என்.அமீன்பாஷா, ஆகில்அகமத், த.மு.மு.க. மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர்அஹமத், மஜ்ஹருல் உலூம் கல்லூரி முதல்வர் ஆதில்அஹமத், வி.நபீல், அபுரார், ஜாகீர்உல்லா, கிரேசியஸ் பள்ளி தாளாளர் முகமது உமர், மென்ஸ் பார்க் ஷமீல்அஹமத், ஷப்னம் ரெடிமேட் தன்வீர்அகமத், அமீனா கிளினிக் டாக்டர் சையத் முக்தார், ஸ்டார் பிரியாணி முனீர்அகமத், முனீர் ஸ்வீட் ரபீக் அகமத், கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் அப்துல்ரசீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கே.இக்பால் அகமத், சமூக சேவகர் அல்தாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். 3 இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆம்பூர் ஈத்கா மைதானத்தில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களுக்கு ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், தி.மு.க. நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் மற்றும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆம்பூர் அருகே சோழுர் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் அமீர்ஜான், சிராஜிதீன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
குடியாத்தம் சித்தூர் கேட் அரபிக்கல்லூரி மைதானம், சேம்பள்ளி கூட்ரோடு, சாமிரெட்டி பள்ளி, ஆர்.கொல்லப்பள்ளி, ஜிட்டப்பள்ளி, மேல்ஆலத்தூர், செட்டிகுப்பம், சரகுப்பம், வளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ் (குடியாத்தம் டவுன்), கவிதா (தாலுகா) உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போல வேலூர் ஆர்.என்.பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.