திருவண்ணாமலையில் ஆட்டோ மோதி கிரிவலம் சென்ற பக்தர் சாவு
திருவண்ணாமலையில் ஆட்டோ மோதி கிரிவலம் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை,
சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 44). இவர், அந்த பகுதியில் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாமோதரன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கிரிவலம் சென்றார்.
காந்திரோட்டில் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த ஆட்டோ திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தாமோதரனின் சகோதரர் லட்சுமணசாமி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த தாமோதரனுக்கு நந்தினி என்ற மனைவியும், ஆதிக்விஷ்ணு (14), அன்வர்த்விஷ்ணு (12) என்ற 2 மகன்களும் உள்ளனர்.