நெல்லையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்ற மேலப்பாளையம், பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் சிறப்பு தொழுகை நடந்தது.
நெல்லை,
மேலப்பாளையம் கரீம் நகரில் உள்ள அல்மதீனா பப்ளிக் பள்ளி மைதானத்தில், மஸ்ஜிதுல் ஹூதா நிர்வாக கமிட்டி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரை நிகழ்த்தினார். மீரான் முகைதீன் பெருநாள் தொழுகை நடத்தினார்.
மஸ்ஜிதுல் ஹூதா நிர்வாக கமிட்டி பொருளாளர் ஜவகர் அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், கிழக்கு மாவட்ட தலைவர் கனி, நிர்வாகிகள் ஜாபர் அலி, லெப்பை, ஜமாத் நிர்வாகிகள், பெண்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், மேலப்பாளையம் பஜார் திடல், அலங்கார் தியேட்டர் திடல் ஆகிய 2 இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. பஜார் திடலில் இஸ்லாமிய பிரசார மாநில செயலாளர் முஸ்தபா பெருநாள் உரையாற்றினார். காஜா மைதீன் ரியாஜி பெருநாள் தொழுகை நடத்தினார்.
அலங்கார் தியேட்டர் வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகையை ஹாமீம் பீர்தவுசி நடத்தினார். கிழக்கு மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் அலிப்பிலால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜமால், பொருளாளர் சுல்தான், துணை செயலாளர் ஷேக் மைதீன், நிர்வாகிகள் மைதீன் பாதுஷா, யூசுப் சுல்தான் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஏழைகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், மேலப்பாளையம் மாநகராட்சி ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடந்தது.
மேலப்பாளையம் நயினார் முகமது ஜூம்ஆ பள்ளி வாசலில் நடந்த தொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் மீரான் மைதீன் கலந்து கொண்டார்.
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி மாவட்ட பொருளாளர் அப்துல் மஜீத், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தலைவர் அப்துல்காதர், கல்விக்குழு உறுப்பினர் முகமது சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் பேட்டை பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் சலாஹீத்தீன் ஹஸரத், முன்னாள் எம்.எல்.ஏ. கோதர் முகைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் முகமது அலி, மாநில நிர்வாகி அப்துல் ஜப்பார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டை முகமது நயினார் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த செய்யது உஸ்மான் கான் கலந்து கொண்டார். நெல்லை பகுதியில் நடந்த ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.