மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2019-06-05 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம் மக்கள் கொண்டாடினர். அதன்படி, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் கிரு‌‌ஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர், அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாடினர்.

கிரு‌‌ஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் பண்டிகையினையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.

இதே போல் கிரு‌‌ஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஓசூர் தர்கா பகுதியில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிகள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்