வானவில் : ஆடி ஏ 3 காருக்கு ரூ.5 லட்சம் சலுகை
சொகுசு கார்களில் ஒன்றான ஆடி காரின் ஏ3 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளாகிறது. இதைக் கொண்டாடும் விதமாக இந்நிறுவனம் ஏ3 மாடலுக்கு ரூ.5 லட்சம் தள்ளுபடி சலுகை அளிப்பதாக அறிவித்துள்ளது.;
விலை குறைப்புக்கு முன்பு இவற்றின் விலை ரூ.33.12 லட்சத்தில் ஆரம்பமானது. ஆடி ஏ3 மாடலில் நான்கு வேரியன்ட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. பிரீமியம் பிளஸ், எப்.எஸ்.ஐ. டெக்னாலஜி, டி.டி.ஐ. பிரீமியம் பிளஸ் மற்றும் டி.டி.ஐ. டெக்னாலஜி ஆகிய நான்கு வேரியன்ட்கள் உள்ளன. தற்போது ரூ.28.99 லட்சத்திற்கு விற்பனையாகிறது..
இந்த ஏ3 மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்ட இது 150 ஹெச்.பி. திறன் மற்றும் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. இது 7 கியர்களுடன் டியூடல் கிளட்ச் வசதியோடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸை கொண்டது. டீசல் மாடலைப் பொறுத்தமட்டில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜின் 143 ஹெச்.பி. திறனுடன் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையைக் கொண்டது.
இது 6 கியர்கள், ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் வந்துள்ளது. சன் ரூப் வசதி, 7 அங்குல இன்போடெயின்மென்ட் தொடு திரை, ஆடி போன் பாக்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டியூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, ஏ.சி. வென்ட், எல்.இ.டி. லைட் வசதி ஆகியவற்றை உள்ளடக்கியது. வசதி படைத்தவர்கள் சொகுசு காரை தள்ளுபடி விலையில் வாங்கலாமே.