சிதம்பரத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சிதம்பரத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் சி.கொத்தங்குடி குமரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் ரமேஷ் (வயது 19). இவர் சி.முட்லூரில் உள்ள அரசு கலலூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் நண்பர்கள் குழுவில் இருந்து பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஆனந்தகுமார் ரமேசை அடிக்கடி திட்டி வந்ததாக தெரிகிறது.
இதனால் ரமேஷ் மனமுடைந்து இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த ரமேஷ், கயிற்றால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட£ர். தூக்கில் பிணமாக தொங்கிய ரமேசை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்நிலையில் இதுபற்றிய தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரமேசின் தாய் அன்னலட்சுமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்.