கூடலூரில் சில்லறை மது விற்பனையை கண்டித்து சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
கூடலூர் மேட்டுக்களம் பகுதியில் சில்லறையில் மது விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.;
கூடலூர்,
கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு நகரின் மையப்பகுதியில் ஒரு அரசு மதுபானக்கடையும், மயானச்சாலை அருகில் மற்றொரு அரசு மதுபானக்கடையும் இயங்கி வருகிறது. இருப்பினும் நகரப் பகுதிகளில் உள்ள கோழி இறைச்சிக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசு மதுபானங்களை மொத்தமாக விலைக்கு வாங்கி சில்லறையில் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை மதுவிலக்கு போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் கூடலூர் தனியார் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடைப்பகுதியில் சிலர் ‘செட்’ போட்டு அனுமதியின்றி சில்லறையில் மதுபானங்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று மேட்டுக்களம் பகுதி மக்கள் கூடலூர் தெற்கு போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஓடைப்பகுதியில் போடப்பட்ட ‘செட்’டின் மேற்கூரைகளை நேற்று முன்தினம் இரவு போலீசார் முற்றிலும் அகற்றினர்.
இந்நிலையில் அகற்றப்பட்ட மேற்கூரைகள் மற்றும் பொருட்களை அதன் உரிமையாளர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலியிடத்தில் கொண்டுபோய் மொத்தமாக வைத்தார். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மீண்டும் சில்லறையில் மதுபானங்கள் விற்க கூடும் என பொதுமக்கள் கருதினர். அதையொட்டி கூடலூர் கன்னிகாளிபுரம், மேட்டுக்களம் பகுதி பொதுமக்கள் இணைந்து நேற்று காலை கூடலூரில் உள்ள குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் சில்லறையில் மது விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தனியார் காலியிடத்தில் போடப்பட்ட மேற்கூரைகள் அனைத்தையும் அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.