நாலச்சோப்ராவில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

நாலச்சோப்ராவில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-04 22:14 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் சித்தேஷ் ஷிண்டே. இவர் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யாமல் இருக்க ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக வாங்கினார். இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சித்தேஷ் ஷிண்டே அந்த நபரிடம் மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக சம்பந்தப்பட்ட நபரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இதையடுத்து அவர் சம்பவத்தன்று சப்-இன்ஸ்பெக்டர் சித்தேஷ் ஷிண்டேயை சந்தித்து லஞ்சப்பணத்தை கொடுத்தார்.

பனத்தை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சித்தேஷ் ஷிண்டேயை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்