தூத்துக்குடி அருகே கீழவைப்பாரில் கடல் அரிப்பால் மீன் ஏலக்கூடம் சேதம்
தூத்துக்குடி அருகே கீழவைப்பாரில் கடல் அரிப்பால் மீன்ஏலக்கூடம் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள கடற்கரை கிராமம் கீழவைப்பார். இந்த பகுதியில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு வசதியாக தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் கடற்கரையில் அமைந்து இருந்த மீன் ஏலக்கூடம் மெல்ல மெல்ல அரிக்கப்பட்டது. அந்த ஏலக்கூடம் முழுவதும் இடிந்து விட்டது. இதனால் ஏலக்கூடம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த கடல் அரிப்பை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து கீழவைப்பாரை சேர்ந்த மீனவர் அடிமைராஜ் என்பவர் கூறும் போது, கீழவைப்பார் பகுதியில் கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கடற்கரையில் இருந்த மீன் ஏலக்கூடம் சேதம் அடைந்து விட்டது. தொடர்ந்து கடல் அரிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என்று கூறினார்.