வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மனு கொடுக் கும் போராட்டம் நடத்தினர்.;
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் மற்றும் தொண்டமாந்துறை ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முறையாக வேலைகள் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் விரைவில் பணி ஆணை பெற்று வேலைகள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்தது போன்று வேலைகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மனு கொடுக்கும் போராட்டம்
இதனை தொடர்ந்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டு நேற்று காலை போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க் கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். அப்போது மிக விரைவில் பணி ஆணை பெற்று 100 நாள் வேலை திட்டப்பணி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.