திருவாரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 957 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 957 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-06-04 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் நிறைவு அடைந்து, தற்போது கோடை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் கொள் முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகளை அரிசியாக வழங்க அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவாரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு 957 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையொட்டி திருவாரூரை சுற்றி உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் 68 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. 

மேலும் செய்திகள்