கரூர் பஸ் நிலையத்தில் டீக்கடையில் தீப்பிடித்ததில் பொருட்கள் எரிந்து சாம்பல் பயணிகள் அலறியடித்து ஓட்டம்
கரூர் பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடையில் தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மேலும் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
கரூர்,
கரூர் சின்னஆண்டாங் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 32). இவர், கரூர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நகராட்சியின் வணிக வளாக கட்டிடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கேயே பலகாரம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை யில் நேற்று மாலை டீக் கடையில் இருந்த கியாஸ் சிலிண்டரின் டியூப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து திடீரென அங்கிருந்த குளிர்சாதன பெட்டி அருகே சென்ற மின்சார வயர் தீப்பிடித்தது. பின்னர் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் கடையில் வேலை செய்தவர் களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் நொடிப்பொழு தில் கடை முழுவதும் பரவிய தீ, கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டீக்கடை ஊழியர்கள் அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், கடை தீப்பற்றி எரிவதை கண்டு அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
டீக்கடை எரிந்து கொண்டி ருந்த போது, அதன் அருகே கரூர் பஸ் நிலையத்தில் சில அரசு பஸ்கள் நின்று கொண்டிருந்தன. தீ விபத்து குறித்து அறிந்ததும், டிரைவர் கள் ஓடி வந்து பஸ்களை அங்கிருந்து ஓட்டிச்சென்று மாற்று இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதை காண முடிந்தது. இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கரூர் தீயணைப்புப்படை வீரர்கள், டீக்கடையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. எனினும் கடையில் இருந்த குளிர் சாதனப்பெட்டி, கிரைண்டர், மிக்சி, மரச்சாமான்கள், திண்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம் பலாகின.
இதைத்தொடர்ந்து கடைக் காரர்கள் உள்ளேயிருந்த பாத்திரங்களை வெளியே எடுத்து வைத்தனர். இந்த தீ விபத்தில் சேத மதிப்பு எவ்வளவு? என்பது பற்றி கரூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கடையின் அருகே தொடர்ச்சியாக அடுத்தடுத்து கடைகளும், அதன் பின்புறம் காய்கறி மார்க்கெட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல் பட்டு தீயை அணைத்ததால் வெளியிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதோடு பெரும் அசம்பாவிதம் தவிர்க் கப்பட்டது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.