ரூ.500 கோடிக்கு காடா துணி தேக்கம் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு

ரூ.500 கோடிக்கு காடா துணி தேக்கம் ஏற்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Update: 2019-06-03 22:15 GMT
பல்லடம், 

பல்லடத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உதவி தலைவர் பழனிசாமி, உதவி செயலாளர் சக்திவேல், முருகன் டெக்ஸ்டைல்ஸ் முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போதைய உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 50 சதவீத ஜவுளி உற்பத்தியை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- முடிவில் 50 சதம் உற்பத்தி குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 8O-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தினமும் 20 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 8 கோடி ஆகும். கடந்த 4 மாத காலமாக உற்பத்தி செய்த காடா துணிவிற்காமல் சுமார் ரூ. 500 கோடி மதிப்பில் துணி தேக்கம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி செய்த துணி விற்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமல் உள்ளது. மார்க்கெட் நிலவரமும் மந்தமான சூழ்நிலையுள்ளதால் ஒரு மீட்டர் உற்பத்தி செய்த துணிக்கு ரூ. 3 நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஜவுளித் தொழில் நடத்த முடியாமல் இருக்கும் நிலையில் 50 சதவீதம் உற்பத்தி குறைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் தொழிலாளர்கள், மில், சைசிங், மற்றும் சார்ந்த தொழில்கள் பாதிப்படையும்.என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்