பாளையங்கோட்டையில் ஒரே நாள் இரவில் துணிகரம்: வங்கி ஊழியர் உள்பட 6 பேர் வீடுகளில் 55 பவுன் கொள்ளை பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
பாளையங்கோட்டையில் ஒரே நாள் இரவில் வங்கி ஊழியர் உள்பட 6 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் செந்தில் மகாராஜனின் வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் மரக்கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், அங்கிருந்த பீரோக்களையும் உடைத்து திறந்தனர். மேலும், அவற்றில் இருந்த 35 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று காலையில் செந்தில் மகாராஜன் தனது வீட்டுக்கு திரும்பி சென்றபோது, கதவுகள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், அதில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருடு போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோன்று அதே தெருவில் அடுத்தடுத்து உள்ள 5 வீடுகளிலும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது தெரியவந்தது. அதாவது, அதே பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (45). இவர் ஷார்ஜா நாட்டில் உள்ள விமான நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு, இசக்கிமுத்துவை பார்ப்பதற்காக அவருடைய மனைவி மற்றும் மகன் ஷார்ஜா நாட்டுக்கு சென்றனர்.
நள்ளிரவில் மர்மநபர்கள் இசக்கிமுத்துவின் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த கேசவராஜ் என்பவரது வீட்டின் கதவு, பீரோவை உடைத்து 4 பவுன் நகையையும், பரமசிவன் என்பவரது வீட்டின் கதவு, பீரோவை உடைத்து 6 பவுன் நகையையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
அதே தெருவில் வசிப்பவர் பொன் இசக்கி (60). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவில் அவரது வீட்டின் கதவு, பீரோவை உடைத்து திறந்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து பொன் இசக்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் திரும்பி வந்த பின்னரே கொள்ளை போன நகை-பணம் பற்றிய விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மோசஸ் (55). இவர் திருச்சியில் உள்ள தன்னுடைய மகனைப் பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் சென்றார். இவரது வீட்டின் கதவையும் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால், அங்கு நகை-பணம் எதுவும் இல்லை.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் ஒரே நாளில் 6 வீடுகளில் மர்மநபர்கள் புகுந்து 55 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது பொதுமக்களை பீதி அடையச்செய்து உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீடுகளில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீடுகளில் மோப்பம் பிடித்து விட்டு சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை நடந்த பகுதி நெல்லை மாநகர போலீஸ் எல்லைக்கு அருகில் இருப்பதால், மாநகர குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவங்கள் குறித்து, பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டையில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்த 6 வீடுகளில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பிருந்தாவனம் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர் உள்பட 3 பேர் வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
எனவே, பாளையங்கோட்டையில் தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பிரண்ட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் செந்தில் மகாராஜன் (வயது 30), வங்கி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள மாமியாரின் வீட்டுக்கு சென்றார்.